உயர் நீதிமன்றம் செல்லப் போவதாக தெரிவிக்கும் மகிந்த

Report Print Ajith Ajith in தேர்தல்

அடுத்த இரண்டு வருடங்களுக்குள் மூன்று தேர்தல்களை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில், மாகாணசபைத் தேர்தல்கள் நடைபெறுமா? இல்லையா? என்பது தொடர்பில் அமைச்சரவை உரிய நடவடிக்கையை எடுக்கவில்லை.

அமைச்சரவை உரிய நடவடிக்கையை எடுக்காது போனால் மாகாணசபைத் தேர்தல்களை நடத்த கோரி உயர் நீதிமன்றம் செல்லப் போவதாக மகிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.