புதிய ஆளுநர்கள் முன்வைக்கவுள்ள கோரிக்கை! ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் திட்டம்

Report Print Kamel Kamel in தேர்தல்

மாகாணசபைத் தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடத்துவது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கவனம் செலுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக பதவிக் காலம் பூர்த்தியான ஆறு மாகாணசபைகளுக்கான தேர்தல்களை நடத்துவது குறித்து ஜனாதிபதி தனது சட்ட மற்றும் அரசியல் ஆலோசகர்களுடன் கலந்தாலோசனை செய்து வருவதாக தெரியவருகிறது.

சர்ச்சைக்குரிய எல்லை நிர்ணய அறிக்கையையும் ஜனாதிபதி பெற்றுக்கொண்டுள்ளார்.

இதேவேளை அண்மையில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பழைய முறையில் தேர்தலை நடத்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட புதிய ஆளுநர்களும் பதவிக்காலம் பூர்த்தியான மாகாணசபைகளுக்கு தேர்தலை நடத்துமாறு எழுத்துமூல கோரிக்கை முன்வைக்க உள்ளனர்.

வரவு, செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டு பூர்த்தியானதன் பின்னர் மாகாணசபைகளுக்கான தேர்தலை நடாத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டமிட்டுள்ளார்.

Latest Offers