தாமதப்பட்டுள்ள மாகாணசபை தேர்தலை விரைவில் நடத்துவதற்கு நீதிமன்றத்தை நாட தேர்தல்கள் ஆணைக்குழு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
மூன்று ஆணையாளர்கள் இது தொடர்பான கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர். யாழில் உள்ள ஆணையாளர் ஸ்கைப் வழியாக இந்த கலந்துரையாடலில் பங்கேற்றார்.
எனினும் மாகாணசபை தேர்தலின் காலதாமதம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்வது குறித்து இதன்போது முடிவுகள் எவையும் எடுக்கப்படவில்லை.
இந்தநிலையில் மாகாணசபை தேர்தல்களை நடத்துமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பும் வலியுறுத்தி வருகின்றன. எனினும் ஐக்கிய தேசியக்கட்சி ஜனாதிபதி தேர்தலை முதலில் கோரிவருகிறது.