எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது கோத்தபாய வாக்களிக்க முடியுமா?

Report Print Kamel Kamel in தேர்தல்

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கு எவ்வித தடையும் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரியொருவர் இந்த விடயத்தை கொழும்பு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இம்முறை ஜனாதிபதி தேர்தல் 2018ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலின் பிரகாரமே நடைபெறுகின்றது எனவும், கோத்தபாய ராஜபக்சவின் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய வாக்களிக்க முடியாது என வெளியிடப்பட்ட கருத்துக்கள் தொடர்பில் பதிலளித்த போது அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.