தேர்தல் நேரத்தில் சமூக வலைத்தளங்களை கண்காணிக்க நடவடிக்கை

Report Print Steephen Steephen in தேர்தல்

தேர்தல் நடைபெறும் காலத்தை இலக்கு வைத்து பேஸ்புக் மற்றும் சமூக வலைத்தளங்களின் செயற்பாடுகளை உன்னிப்பாக கண்காணிக்குமாறு இலங்கை தகவல் தொழிநுட்ப சங்கத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் நேரத்தில் போலியான பேஸ்புக் மற்றும் டுவிட்டர் கணக்குகளை ஆரம்பித்து, பல்வேறு அவமதிப்பு மற்றும் பகையை ஏற்படுத்தும் பதிவுகள் பதிவேற்றம் செய்யப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தகவல் தொழிற்நுட்ப சங்கத்தின் தலைவர் ரஜீவ் யசிரு தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிவுக்கும் தகவல் தொழிநுட்ப சங்கத்தினருக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.