தேர்தலை உடன் நடத்துமாறு மஹிந்த தரப்பும், காலம் தாழ்த்துமாறு மைத்திரி தரப்பும் கோரிக்கை

Report Print Kamel Kamel in தேர்தல்

ஜனாதிபதி தேர்தலை உடனடியாக நடத்துமாறு மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

எனினும் ஜனாதிபதி தேர்தலை முடிந்தளவு காலம் தாழ்த்தி நடத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவருகிறது.

இந்த இரண்டு கோரிக்கைகளும் தேர்தல் ஆணைக்குழுவிடம் எழுத்து மூலம் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

என்ற போதும் கோரிக்கைகள் தொடர்பிலும் தேர்தல் ஆணைக்குழு இதுவரையில் எவ்வித பதில்களையும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி தேர்தலை நடத்தக்கூடிய அண்மைய நாள் நவம்பர் மாதம் 7ஆம் திகதி என்பதுடன், மிகவும் காலம் தாழ்த்திய திகதி டிசம்பர் மாதம் 9ஆம் திகதி என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.