ஜனாதிபதியாக வர முயற்சிக்கும் 5 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்!

Report Print Ajith Ajith in தேர்தல்

கோத்தபாய ராஜபக்ச உட்பட்ட மூன்று ஜனாதிபதி வேட்பாளர்கள் இன்று ஜனாதிபதி தேர்தல் வேட்பாளருக்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.

பொதுஜன பெரமுனவின் சார்பில் கோத்தபாய ராஜபக்ச, அபே ஜனபலயவின் சார்பில் பிரசன்ன பெரேரா, சுயாதீன வேட்பாளராக அப்பரகே புண்ணியாநந்த தேரர் ஆகியோர் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் இதுவரை 6 பேர் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் செயலக தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

கட்சிகளின் சார்பில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர் 50 ஆயிரம் ரூபாவையும், சுயாதீன வேட்பாளர் ஒருவர் 75 ஆயிரம் ரூபாவையும் கட்டுப்பணமாக செலுத்தவேண்டும்.