ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்தினாரா மகேஷ் சேனாநாயக்க?

Report Print Murali Murali in தேர்தல்

எதிர்வரும், ஜனாதிபதி தேர்தலில் தான்போட்டியிடவுள்ளதாகவும், அதற்கு கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படும் செய்திகள் முற்றிலும் பொய்யானது என முன்னாள் இராணு தளபதி லெப்டினல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

இராணுவ தளபதி பதவியில் இருந்து தான்ஓய்வு பெற்றதை தொடர்ந்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் ஊடாக குறிப்பிடப்பட்டன.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக எவ்வித தீர்மானங்களையும் தான் இதுவரையில் மேற்கொள்ளவில்லை. ஆகவே சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்திகள் முற்றிலும் பொய்யானது என அவர் மேலும் கூறியுள்ளார்.

முன்னதாக, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க தீர்மானித்துள்ள நிலையில், நேற்றைய தினம் அவர் சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...