ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்தினார் அனுரகுமார!

Report Print S.P. Thas S.P. Thas in தேர்தல்
54Shares

ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயகவுக்கான தேர்தல் கட்டுப்பணம் இன்று (01) செலுத்தப்பட்டுள்ளதாக அக்கட்சியினை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

தேசிய மக்கள் சக்தி கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அவர் இன்றைய தினம் கட்டுப்பணத்தினை செலுத்துயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேசிய மக்கள் சக்தி கட்சி அங்கீகரிக்கப்பட்ட ஒரு கட்சியல்ல என்பதனால், அக்கட்சிக்கு ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் அங்கீகாரம் பெற்ற சின்னம் ஒன்றைத் தெரிவு செய்வதற்கு அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது.

இதுதவிர, சமன்சிறி ஹேரத் விஜித குமார கீர்த்தி ரத்ன மற்றும் அனுருத்த பொல்கம்பல ஆகியோரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை இன்று செலுத்தியுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.