மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதி தேர்தல் களத்தில் அனுர லியனகே

Report Print Gokulan Gokulan in தேர்தல்
89Shares

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையாகவும் தாம் போட்டியிடப்போவதாக இலங்கை தொழிலாளர் கட்சியின் தலைவர் அனுர லியனகே தெரிவித்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

தேர்தலில் போட்டியிடுவதற்காக இன்று அவர் தேர்தல்கள் ஆணைக்குழுவில் கட்டுப்பணம் செலுத்தவுள்ளதாகவும் அவ்வூடகம் மேலும் தெரிவித்துள்ளது.

2017ஆம் ஆண்டில் கட்டார் நாட்டிற்கான தூதுவராக நியமிக்கப்பட்டிருந்த லியனகே பல்வேறு சர்ச்சைகளினால் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் அப்பதவியை இராஜினாமா செய்திருந்தார். மாகாண ஆளுநர்களின் மீள் நியமனத்தின் போது லியனகேவிற்கு ஆளுநர் நியமனம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் ஆளுநராக நியமிக்கப்படவில்லை.

கடந்த 2010 மற்றும் 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல்களிலும் அவர் போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.