ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு விதிக்கப்பட்ட தடை!

Report Print Vethu Vethu in தேர்தல்

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் நபர்கள் அல்லது கட்சி உறுப்பினர்களுக்கு வீதியின் இரண்டு பக்கங்களும் டிஜிட்டல் பெயர் பலகைகளை பயன்படுத்தி பிரச்சார நடவடிக்கை மேற்கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இதனை அறிவித்துள்ளார்.

அத்துடன் சினிமா மண்டபங்களுக்குள் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முற்று முழுதாக தடை விதிக்கப்பட்டுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடும் வேட்பாளர்களுக்கு எதிராக தேர்தல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்வதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.