கட்டுப்பணம் செலுத்தநாளையே இறுதித் திகதி

Report Print Rakesh in தேர்தல்

அடுத்த மாதம் 16ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்துவதற்கான திகதி நாளை ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடையவுள்ளது.

இதன்படி நாளை காலை 8 மணியிலிருந்து நண்பகல் 12 மணி வரையில் கட்டுப்பணம் செலுத்த முடியும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக இன்று வரையில் 33 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Latest Offers

loading...