மட்டக்களப்பில் தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்தது கோத்தபாய தரப்பு

Report Print Kumar in தேர்தல்

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல்கள் நிறைவடைந்துள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பொதுஜன பெரமுன முதலாவது தேர்தல் பிரசாரத்தினை இன்று மாலை ஆரம்பித்தது.

பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் பி.சந்திரகுமார் தலைமையில் இந்த தேர்தல் பிரசாரபணிகள் இன்று ஆரம்பித்துவைக்கப்பட்டன.

மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இருந்து பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஸவினை ஆதரிக்கும் வகையில் இந்த பிரசாரப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவினை ஆதரிக்கும் வகையிலான பல்வேறு துண்டுப்பிரசுரங்கள் இதன்போது விநியோகம் செய்துவைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் பி.சந்திரகுமார் உட்பட கட்சியின் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.