தேர்தல் கால சுவரொட்டிகளை அகற்றுவதற்கு 45 மில்லியன் ஒதுக்கீடு!

Report Print Ajith Ajith in தேர்தல்

ஜனாதிபதி தேர்தலின்போது ஒட்டப்படும் சுவரொட்டிகள் மற்றும் காட்சிப்பொருட்களை அகற்ற 45 மில்லியன் ரூபாய்களை ஒதுக்கீடு செய்ய இலங்கை காவல்துறை தீர்மானித்துள்ளது.

காவல்துறை பேச்சாளர் ருவன் குணசேகர இதனை இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.

சுவரொட்டிகள் மற்றும் தேர்தல் பிரசாரப்பொருட்களை அகற்ற தற்காலிக அடிப்படையில் பணியாளர்கள் அமர்த்தப்படவுள்ளனர். இதன்படி 1405 பணியாளர்களை பணிகளில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை எம்பிலிப்பிட்டிய பிரதேச சபை தேர்தல் தொடர்பில் இதுவரை வன்முறைகள் எவையும் பதிவாகவில்லை என்றும் ருவன் குணசேகர குறிப்பிட்டார்.