கைதிகளுக்கு வாக்குரிமை வழங்கப்பட வேண்டுமெனக் கோரி மனு

Report Print Ajith Ajith in தேர்தல்

கைதிகளுக்கு வாக்குரிமை வழங்கப்பட வேண்டுமெனக் கோரி மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கைதிகள் மற்றும் சந்தேக நபர்களும் வாக்களிப்பதற்கு அனுமதிக்கப்பட வேண்டுமென கோரியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் மற்றும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ஆகியோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

கைதிகள் வாக்களிப்பதனை தடுப்பதன் மூலம் அவர்களின் வாக்குரிமை பறிக்கப்படுவதாகவும் அது அவர்ளின் அடிப்படை மனித உரிமை மீறல் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதிகள் மற்றும் சந்தேக நபர்கள் வாக்களிப்பதற்கு ஆவண செய்யுமாறு உரிய அதிகாரிகளுக்கு ரீட் உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.