எல்பிட்டிய தேர்தல் மிகவும் அமைதியான முறையில் நடைபெறுகின்றது

Report Print Kamel Kamel in தேர்தல்

எல்பிட்டிய தேர்தல் மிகவும் அமைதியான முறையில் நடைபெற்று வருவதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தற்பொழுது எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் நடைபெறும் பகுதிக்கு விசேட விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் இன்று இரவு 10.00 மணியளவில் வெளியிட முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

வாக்களிப்பில் பங்கேற்பதற்கு மக்கள் மத்தியில் கூடுதலான ஆர்வம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

மிகவும் அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்று வருவதாகவும், ஜனாதிபதி தேர்தலைப் போன்றே இந்த தேர்தலும் முக்கியத்துவம் வாய்ந்தது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுவரையில் வன்முறைச் சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை எனவும் பொலிஸார் மிகுந்த சிரத்தையுடன் பாதுகாப்பு கடமைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்று மாலை 4.00 மணியின் பின்னர் வாக்குச் சாவடிகளில் அந்தந்த வாக்குச் சாவடிகளுக்கான வாக்கு எண்ணும் பணிகள் நடைபெறும் எனவும், பின்னர் அவை ஒன்று திரட்டப்பட்டு மொத்த முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.