எல்பிட்டிய தேர்தலில் அதிகளவாக செலுத்தப்பட்ட வாக்குகள்

Report Print Ajith Ajith in தேர்தல்

காலி, எல்பிட்டிய பிரதேச சபைக்கான வாக்களிப்பின் முடிவில் 72 வீத வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே உயர்நீதிமன்ற உத்தரவின்படி, நிறுத்திவைக்கப்பட்டிருந்த எல்பிட்டி பிரதேச சபைக்கான வாக்களிப்பு இன்று நடத்தப்பட்டது.

இதன்போது வாக்காளர்கள் காலை முதலே அதிகளவில் வாக்களித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

28 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 47 வாக்களிப்பு நிலையங்களில் இன்று வாக்களிப்புகள் இடம்பெற்றன. அந்தவகையில் 53,384 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதிப் பெற்றிருந்தனர்.

ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஜே.வி.பி உட்பட்ட வகையில் கட்சிகள் மற்றும் சுயாதீன உறுப்பினர்கள் என்று 155 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டிருந்தனர்.