அமோக வெற்றியை பதிவு செய்த பொதுஜன பெரமுன கட்சி! மகிழ்ச்சியில் மஹிந்த தரப்பு

Report Print Vethu Vethu in தேர்தல்
1166Shares

காலி – எல்பிட்டிய பிரதேச சபைக்கு இன்று இடம்பெற்ற தேர்தலில் பொதுஜன பெரமுன அமோக வெற்றியை பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இன்று மாலை 4 மணியுடன் வாக்களிப்பு நிறைவடைந்ததை அடுத்து வாக்குகளை எண்ணும் பணி இடம்பெற்றது. இந்த தேர்தலில் 75 வீதமாக வாக்காளர்கள் வாக்களித்திருந்தனர்.

கிடைக்கப் பெற்ற தகவல்களுக்கு அமைய குடாகல கதிரங்கல பகுதியில் பொதுஜன பெரமுன கட்சி 2108 வாக்குகளையும், ஐக்கிய தேசிய கட்சி 629 வாக்குகளையும், மக்கள் விடுதலை முன்னணி 245 வாக்குகளையும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 209 வாக்குகளையும்,

திக்ஹேன இந்திபல்லேகொட பகுதியில் பெரமுன கட்சி 793 வாக்குகளையும், ஐக்கிய தேசிய கட்சி 626 வாக்குகளையும், மக்கள் விடுதலை முன்னணி 343 வாக்குகளையும்

ஓமந்த பகுதியில் பொதுஜன பெரமுன கட்சி 1616 வாக்குகளையும், ஐக்கிய தேசிய கட்சி 1018 வாக்குகளையும், மக்கள் விடுதலை முன்னணி 110 வாக்குகளையும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 291 வாக்குகளையும் பெற்றுள்ளன.

அதிகாரபூர்வமான தேர்தல் முடிவு இரவு 10 மணிக்கு முன்னர் வெளியாகும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த வெற்றியானது மஹிந்த தரப்புக்கு பெரும் உத்வேகத்தை கொடுத்துள்ளதாக தெரிய வருகிறது. இதன் காரணமாக ராஜபக்ஷகள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.