தேர்தலுடன் தொடர்புடைய 269 முறைப்பாடுகள் பதிவு!

Report Print Rakesh in தேர்தல்

ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய வன்செயல்கள் மற்றும் சட்ட மீறல்கள் குறித்து கடந்த 8ம் திகதி முதல் 10ம் திகதி மாலை 4.30 மணி வரை நாடளாவிய ரீதியில் 269 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என்று சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் 10ம் திகதி மாத்திரம் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்தில் வன்செயல்கள் தொடர்பில் இரு முறைப்பாடுகளும், சட்ட மீறல்கள் தொடர்பில் 66 முறைப்பாடுகளும், வேறு இரு முறைப்பாடுகளும் மொத்தமாக 70 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

இதேபோன்று மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்தில் சட்டமீறல்கள் தொடர்பில் 43 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

அதற்கமைய இதுவரையில் தேர்தல் வன்செயல்கள் தொடர்பில் 5 முறைப்பாடுகளும், சட்ட மீறல்கள் தொடர்பில் 262 முறைப்பாடுகளும், வேறு இரு முறைப்பாடுகளும் என மொத்தமாக 269 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.