வாக்குப்பெட்டிகள் தொடர்பில் தேர்தல்கள் திணைக்களத்தின் தீர்மானம்

Report Print Ajith Ajith in தேர்தல்

மூன்று வெவ்வேறு அளவுகளைக் கொண்ட 'காட்போட்' வாக்குப்பெட்டிகளை கொள்வனவு செய்ய தேர்தல்கள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இதன்படி சுமார் 10,000 சிறப்புப் பெட்டிகள் கொள்வனவு செய்யப்படவுள்ளன.

இந்தப்பெட்டிகள் சிறப்பான கடின நிலையில் எந்த அதிர்வையும் தாங்கக்கூடிய வகையில் உற்பத்தி செய்யப்படவுள்ளன.

நடைமுறையில் 400 வாக்குச்சீட்டுக்களுக்கு ஒரு வாக்குப்பெட்டி பயன்படுத்தப்படுகிறது.

இந்தநிலையில் ஜனாதிபதி தேர்தலில் 2.2 அடி உயரமான வாக்குச்சீட்டுக்களுக்காக இதே அளவைக்கொண்ட மூன்று பெட்டிகள் தேவைப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.