வவுனியா மாவட்டத்தில் 142 வாக்களிப்பு நிலையங்கள்

Report Print Theesan in தேர்தல்

வவுனியா மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்காக 142 வாக்களிப்பு நிலையங்கள் நிறுவப்படவுள்ளதுடன் இடம்பெயர்ந்த வாக்காளர்கள் எவரும் இம்முறை இடம்பெறவில்லை எனவும் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம்.ஹனீபா தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

வவுனியா மாவட்டத்தில் 117,333 வாக்காளர்களுக்காக 142 வாக்களிக்கும் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளது. அதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை வவுனியா மாவட்டத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட அஞ்சல் வாக்காளர்களின் எண்ணிக்கை 5038 ஆகும். இதில் 4140 விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டும் 750 நிராகரிக்கப்பட்டும் உள்ளது.

இதில் வெளிமாவட்டங்களுக்கு 147 வாக்குகள் அனுப்பப்பட்டுள்ளது. ஏனைய அஞ்சல் வாக்குச் சீட்டுகள் அனைத்தும் அந்தந்த திணைக்களங்களுக்கு உரிய நேரத்தில் அனுப்பப்பட்டுள்ளது.

தேர்தல் கால முறைப்பாடுகளாக 14 முறைப்பாடுகள் இதுவரை பதிவிடப்பட்டுள்ளது. அவற்றுக்கு சரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தீர்வு காணப்பட்டு வருகின்றது.

இதேவேளை, கடந்த காலங்களைப் போல் இம்முறை இடம்பெயர்ந்த வாக்காளர்கள் எவரும் வன்னி தேர்தல் தொகுதியில் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.