வாக்கு அட்டைகள் விநியோகிக்கும் பணி ஆரம்பம்

Report Print Ajith Ajith in தேர்தல்

2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கு அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அஞ்சல்துறையின் உப மா அதிபர் டி.ஏ.ஆர்.கே ரணசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

வாக்கு அட்டைகள் நேற்று மாலையளவில் மாவட்ட செயலாளர்களால் அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், குறித்த வாக்கு அட்டைகள் வாக்காளர்களின் முகவரிகளுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக அஞ்சல்துறையின் உப மா அதிபர் டி.ஏ.ஆர்.கே. ரணசிங்க தெரிவித்தார்.

இந்த விநியோகம் நவம்பர் 9ஆம் திகதி வரை நீடிக்கும் என்று அஞ்சல்துறையின் உப மா அதிபர் டி.ஏ.ஆர்.கே ரணசிங்க குறிப்பிட்டார்.

இதில் நவம்பர் 3ஆம் திகதி வாக்கு அட்டைகளை விநியோகிக்கும் விசேட நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விநியோகத்துக்காக நாடாளாவிய ரீதியில் 8000 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை நவம்பர் 4ஆம் திகதியன்று அஞ்சல் வாக்களிப்புக்கள் இடம்பெறவுள்ளன.

இதன்போது வாக்களிக்க முடியாதவர்களுக்கு நவம்பர் 7ஆம் திகதி வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அஞ்சல்துறையின் உப மா அதிபர் டி.ஏ.ஆர்.கே ரணசிங்க இதனை தெரிவித்துள்ளார்