உத்தியோகபூர்வமாக விலகிய சிவாஜிலிங்கம்

Report Print Sumi in தேர்தல்

ஜனாதிபதி வேட்பாளரும் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் ரெலோ கட்சியில் இருந்து விலகிவிட்டதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை உறுதிப்படுத்தினார்.

முன்னாள் வடமாகாண சபை உறுப்பினரான எம்.கே.சிவாஜிலிங்கம் கட்சியில் இருந்து விலகிவிட்டதாக ரெலோ கட்சியின் செயலாளர் என். ஸ்ரீகாந்தா அறிவித்ததை தொடர்ந்து கட்சியில் இருந்து விலகியதை சிவாஜிலிங்கம் இவ் ஊடக சந்திப்பில் அறிவித்திருந்தார்.

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் எம்.கே.சிவாஜிலிங்கம் வேட்புமனு தாக்கல் செய்ததன் பின்னர், கட்சியில் இருந்து விலகுமாறு கட்சி உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டதற்கு அமைவாக கட்சியில் வகித்த பதவியில் இருந்து விலகுவதாக கடிதம் மூலம் கட்சிக்கு உறுதிப்படுத்தினார்.

அக்கடிதத்திற்கு அமைவாக இன்று 03 ஆம் திகதி முதல் சிவாஜிலிங்கம் ரெலோ கட்சியில் இருந்து விலகிவிட்டதாக கட்சியின் தலைவர் அறித்திருந்தார். அதனடிப்படையில் சிவாஜிலிங்கம் ரெலோ கட்சியில் இருந்தும், தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்தும் தான் விலகிவிட்டதை உறுதிப்படுத்தியுள்ளார்.