11 ற்கும் மேற்பட்டவர்கள் வந்தால் அது சட்டவிரோத பேரணி : ருவன் குணசேகர

Report Print Banu in தேர்தல்

11 ற்கும் மேற்பட்டவர்கள் தேர்தல் பிரச்சாரத்திற்காக வீடுகளுக்கு வந்தால் அது சட்டவிரோத பேரணியாக கருதப்படுமென பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் தொடர்பில் மேலும்,

தேர்தல் சட்டவிதிகள் படி பிரச்சாரம் செய்வதற்கும் , கையேடுகளை விநியோகிப்பதற்கும் வீடுகளுக்கு வரும் குழுவில் 11 ற்கும் மேற்பட்ட நபர்கள் வீடுகளுக்கு செல்ல முடியாது. அவ்வாறு 11 ற்கும் மேற்பட்டவர்கள் வருகை தரும் சந்தர்ப்பங்கள் சட்டவிரோத பேரணியாக கருதப்படும்.

கையேடுகள் மற்றும் புகைப்படங்கள் போன்ற விளம்பரப் பொருட்களை வீதிகளில் காட்சிப்படுத்த முடியாது. மேலும் தேர்தல் பிரச்சாரங்களுக்கு பட்டாசுகள் அல்லது இசைக்கருவிகள் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும், அனைத்து சுவரொட்டிகள் மற்றும் கையேடுகளில் கட்டாயமாக அதனை அச்சடித்த அச்சகத்தின் பெயர் மற்றும் முகவரி குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

ஜனாதிபதி தேர்தலுக்காக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளை அகற்ற நாடளாவியரீதியில் 1,661 தற்காலிக தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை, தேர்தல் தொடர்பாக 58 முறைப்பாடுகள் மற்றும் 84 சட்ட மீறல்கள் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இதுவரையில் 55 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளார்.