சரியான முறையில் வாக்களிக்குமாறு மஹிந்த கோரிக்கை

Report Print Kamel Kamel in தேர்தல்

சரியான முறையில் வாக்களிக்குமாறு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய வாக்காளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அண்மையில் அவர் கூறுகையில்,

வாக்குச் சீட்டில் தனக்கு விருப்பமான வேட்பாளர் அல்லது வேட்பாளர்களுக்கு சரியான முறையில் வாக்களிக்கத் தவறினால் மீளவும் ஓர் வாக்குச் சீட்டு வழங்கப்படாது.

எனவே புள்ளடியிடுதல் அல்லது இலக்கங்களை இடுதல் ஆகிய முறைகளின் மூலம் வாக்களிக்கும் வாக்காளர்கள் மிகவும் கவனமாக சரியான முறையில் வாக்களிக்க வேண்டும்.

வாக்களிக்கும் போது மிகுந்த நிதானத்துடன் சரியான முறையில் வாக்களிக்குமாறு மஹிந்த தேசப்பிரிய கோரியுள்ளார்.

தேர்தல்கள் ஆணையக தலைவர் மீண்டும் விடுத்துள்ள எச்சரிக்கை

உத்தியோகபூர்வமற்ற தேர்தல் கணிப்புக்களை வெளியிடும் ஊடகங்களுக்கு தேர்தல்கள் ஆணையக தலைவர் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிராந்திய செய்தியாளர்களின் தகவல்களை அடிப்படையாகக்கொண்டு வெளியிடப்படும் தகவல்கள் தேர்தலுக்கு முன்னர் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்று ஆணையக தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

எனவே அனைத்து ஊடகங்களும் இந்த செயற்பாடுகளில் இருந்து விலகிக்கொள்ள வேண்டும்.

இதேவேளை தேர்தல் முடிவடைந்து உத்தியோகபூர்வ முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னரே ஊடகங்கள் அவற்றை வெளியிட வேண்டும்.

இல்லையேல் குறித்த ஊடகங்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆணையகத் தலைவர் எச்சரித்துள்ளார்.