யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் வாக்களிப்பது தொடர்பிலான கருத்தமர்வு

Report Print Banu in தேர்தல்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கும் முறை தொடர்பிலான விழிப்பூட்டல் கருத்தமர்வு யாழ்ப்பாணத்தில் நாளை நடைபெறவுள்ளது.

யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பேராசிரியர் ரட்ணஜீவன் கூல் தலைமையில் நடைபெறவுள்ள இந்த கருத்தமர்வில், ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கும் முறை தொடர்பிலான பூரண விளக்கம் வழங்கப்படவுள்ளது.

நல்லூர் யூரோவில் மாநாட்டு மண்டபத்தில் நாளை காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ள குறித்த கருத்தமர்வில் ஆர்வமுள்ளோர் மற்றும் ஏனையோருக்கு வாக்களிப்பது தொடர்பில் தெளிவூட்ட விரும்புவோர், சிவில் சமுக செயற்பாட்டாளர்கள் அனைவரும் கலந்து கொள்ள முடியும் என யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.