இலங்கை தேர்தல் முறையில் மறைக்கப்படும் உண்மை

Report Print Malar in தேர்தல்

ஜனாதிபதி தேர்தலில் முதலாவது சுற்று வாக்கெடுப்பு எண்ணிக்கையின் போது ஒருவர் 50% + 1 வாக்குகளை பெற தவறினால் விருப்பத் தேர்வு வாக்குகளை எண்ணத் தேவையில்லை என மூத்த அரசியல் ஆய்வாளர் மு.திருநாவுகரசு தெரிவித்துள்ளார்.

தேர்தல் தொடர்பில் விளக்கமளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் அவர்,

1982ஆம் ஆண்டிலிருந்து இதுவரை ஜனாதிபதி தேர்தல்கள் நடைபெற்று இருந்தாலும் கூட முதாவது சுற்றுவாக்கெடுப்பு எண்ணிக்கையிலேயே ஒரு நபர் 50 வீத வாக்குகள் பெறும் பட்சத்தில் இராண்டாம் சுற்று, மூன்றாம் சுற்று வாக்கு எண்ணிக்கைகள் தேவைப்படாது.

இலங்கையில் ஒருசுற்றுலேயே ஒரு நபர் மூன்று வேட்பாளர்களுக்கு வாக்களிக்கலாம். விருப்புத்தேர்வு வாக்கு இலங்கையில் மிகவும் விநோதமானது.

ஆனால், இம்முறை முதலாவது சுற்று வாக்கெடுப்பு எண்ணிக்கையின் போது ஒருவர் 50% + 1 வாக்குகளை பெற தவறினால் விருப்பத் தேர்வு வாக்குகளை எண்ணத் தேவையில்லை.

இதனை கணிதமாக பேசிக்கொண்டிருக்காமல் உதாரணமாக, நடைமுறையாக பார்த்தால் பிரச்சினையை விளங்கிக் கொள்வது இலகுவானதாக இருக்கும் என அவர் கூறியுள்ளார்.