மகிந்த ராஜபக்ச விடுத்துள்ள கோரிக்கை!

Report Print Rakesh in தேர்தல்

“ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசின் நான்கரை வருட கால முறைகேடுகளை மீள் நினைவுபடுத்தி மக்கள் ஜனாதிபதித் தேர்தலில் சிறந்த தீர்மானத்தை எடுக்கவேண்டும்."

இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவை ஆதரித்து திஸ்ஸமஹாராம பகுதியில் இன்று நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

“ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியமைத்த காலத்தில் இருந்து நாடு பாரிய அழிவுகளை எதிர்கொண்டது. அனைத்துத் துறைகளும் வீழ்ச்சியடைந்துள்ளமையால் மக்கள் பெரிதும் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியுள்ளார்.

போலியான வாக்குறுதிகளினால் மீண்டும் ஆட்சி மாற்றத்தை ஒருபோதும் ஏற்படுத்த முடியாது. அரசியல் தீர்மானத்தை மக்கள் தீர்மானித்துவிட்டார்கள். அதனை நவம்பர் 18ஆம் திகதி அறிந்துகொள்ளலாம்.

ஐக்கிய தேசியக் கட்சியின் நிர்வாகமே கடந்த நான்கரை வருட காலமாகக் காணப்பட்டது. இடைப்பட்ட காலத்தில் நாடு எதிர்கொண்ட அழிவுகளை மீள்நினைவுப்படுத்தி மக்கள் அரசியல் ரீதியில் தீர்மானத்தை எடுக்க வேண்டும்.

ஒவ்வொரு பிரதேசங்களுக்கும் அபிவிருத்திகளை வேறுபடுத்தி முன்னெடுக்கமாட்டோம். அனைத்துப் பிரதேசங்களுக்கும் ஒருமித்த வகையிலான அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படும்.

நாட்டு மக்கள் அனைவரும் இன்று இன, மத, மொழி பேதங்களை துறந்து பலமான அரசை ஏற்படுத்த த் தீர்மானித்துள்ளார்கள். போலியான சேறுபூசல்களுக்கு இனியும் இடம் கிடையாது. நிச்சயம் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசே தோற்றம் பெறும்" - என்றார்.

Latest Offers