தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்!

Report Print Vethu Vethu in தேர்தல்

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கும் போது இலக்கம் 1 அல்லது x அடையாளத்தை பதிவிடுமாறும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

வாக்குசீட்டில் 1 மற்றும் x ஆகிய இரண்டு அடையாளங்களை அடையாளமிட்டால் அந்த வாக்குச்சீட்டு செல்லுப்படியற்றதாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு வாக்காளர் தங்கள் விருப்பமான வாக்குகளை அளிக்க விரும்பினால், இலக்கம் ஒன்றின் ஊடாக வாக்களிக்க முடியும்.

விருப்பு வாக்குகளை பயன்படுத்த 2ஆம் மற்றும் 3ஆம் இலக்கங்களை பயன்படுத்திய வாக்களிக்க முடியும்.

இரண்டு அடையாளங்களையும் பயன்படுத்தினால் வாக்குச்சீட்டு நிராகரிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.