ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் தொடர்பில் ஆணைக்குழு வெளியிட்டுள்ள தகவல்

Report Print Vethu Vethu in தேர்தல்

ஜனாதிபதித் தேர்தலின் முதல் முடிவு நாளை நள்ளிரவு 12 மணியளவில் வெளியிடப்படுமென தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தலின் உத்தியோகபூர்வ இறுதி அறிவிப்பு 18 ஆம் திகதி பிற்பகல் அளவில் வெளியிடப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாளை எழு மணி முதல் மாலை 5 மணிவரை வாக்களிக்க முடியும். தேசிய அடையாள அட்டை அல்லது ஏனைய ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆவணத்தை சமர்ப்பித்து வாக்களிக்க முடியும். உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை கிடைக்காகவிட்டாலும் வாக்காளர் இடாப்பில் பெயர் இருந்தால் குறிப்பிட்ட வாக்களிப்பு நிலையத்திற்கு சென்ற தனது அடையாளத்தை உறுதிப்படுத்தி வாக்களிக்க முடியும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

தென்னாபிரிக்க மனித உரிமைகள்அமைப்பு, இந்தோனேஷியா, இந்தியா, மாலைதீவு, புருணை ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பொதுநலவாய அமைப்பு என்பனவற்றின் கண்காணிப்பாளர்கள் தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் கொழும்பு கம்பஹா, யாழ்பாணம், ஹம்பாந்தோட்டை, வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை,திருகோணமலை, குருணாகல், புத்தளம், மொனராகலை ஆகிய மாவட்டங்களில் நேற்று முதல்கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருவதாக தலைவர் மேலும குறிப்பிட்டுள்ளார்.