தேர்தல் செயலகம் விடுத்துள்ள அனைவருக்குமான விசேட அறிவித்தல்

Report Print Banu in தேர்தல்

வாக்களிப்பது ஜனநாய கடமை, அதனை அனைவரும் சரியாக நிறைவேற்ற வேண்டுமென பிரதி தேர்தல்கள் ஆணையாளர் அச்சுதன் தெரிவித்தார்.

நாளை நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடர்பில் எமது செய்திச்சேவைக்கு விசேடமாக கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறினார்.

மேலும் கூறுகையில், 13ஆம் திகதி நள்ளிரவுடன் தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகள் நிறைவு பெற்றுள்ளன.

இதுவரை வேட்பாளர்கள் தமது கொள்கைகள் தொடர்பில் தெரிவித்துள்ளதை வைத்து பொருத்தமான வேட்பாளரை மக்கள் சிந்தித்து தெரிவு செய்யவதற்கு காலமும் வழங்கப்பட்டுள்ளது.

தேர்தல் விதிகளை மீறாமல் மக்கள் சுதந்திரமாக வாக்களிக்க கூடிய அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல்கள் ஆணையகம் செய்துள்ளது.

அமைதியான இக் காலப்பகுதியில் வேட்பாளர்களும் அவர்களது ஆதரவாளர்களும் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் மக்கள் சுதந்திரமாக வாக்களிக்க தேர்தல்கள் ஆணையத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வாக்களிப்பது என்பது ஜனநாயக கடமையாகும். வாக்களிப்பிலிருந்து விலகி இருப்பது ஜனநாய கடமைக்கு விரோதமானதாகும்.

வாக்களிப்பதற்காக செல்லும் போது அடையாளத்தை உறுதிப்படுத்தக்கூடிய உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

இம்முறை தேர்தலில் நீளமான வாக்குசீட்டு பயன்படுத்தப்படுவதால் வாக்களிக்க அதிக நேரம் செலவிடநேரிடும்.

எனவே அனைவரும் நேரத்திற்கு சென்று தங்கள் வாக்குகளை சரியான முறையில் அளிக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

தேர்தல் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் விதிமீறல்கள் தொடர்பில் கைது செய்யப்படுபவர்களுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என குறிப்பிட்டார்.