இம்முறை வரலாற்று சிறப்புமிக்க தேர்தல்: ஜனாதிபதி

Report Print Steephen Steephen in தேர்தல்

வரலாற்றில் முதல் முறையாக அரச தலைவர் கட்சி சார்பின்றி நடுநிலை வகிப்பதால் இம்முறை நீதியான மற்றும் அமைதியான தேர்தலை நாட்டில் நடத்த முடிந்துள்ளதாகவும் இது ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட்ட நாடு ஒன்றின் அடிப்படையான அடையாளம் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு மற்றும் பொலிஸ் துறைக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் தான் இது குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் நீதி மற்றும் அமைதியான தேர்தலுக்காக தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

தனது நடுநிலையான கொள்கை காரணமாக இம்முறை ஜனாதிபதித் தேர்தல் வரலாற்று சிறப்புமிக்க தேர்தலாக மாறியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸ் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற சந்திப்பொன்றில் ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.

ஜனாதிபதி இன்று காலை பொலிஸ் திணைக்களத்திற்கு விஜயம் செய்ததுடன் அவருக்கு பொலிஸ் அணி வகுப்பு மரியாதை வழங்கி சிறப்பான வரவேற்கு அளிக்கப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பொலிஸ் திணைக்களத்திற்கு சென்ற ஜனாதிபதி பதில் பொலிஸ் மா அதிபர் சீ.டி. விக்ரமசிங்க உட்பட உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.