நாளைய தினம் என்ன செய்ய போகின்றோம்? இலங்கையர்களே உங்கள் கவனத்திற்கு...

Report Print Sujitha Sri in தேர்தல்

மாற்றம்.. இந்த வார்த்தை வெறும் வார்த்தையென்று நினைக்கின்றீர்களா? இந்த வார்த்தையில் பல தனி மனிதர்களின், பல குடும்பங்களின், பல சமூகங்களின், பல நாடுகளின் எதிர்காலம் தங்கியுள்ளது தெரியுமா உங்களுக்கு.

நாம் ஏதாவது ஒரு இடத்தில் தவறை காணும் போது அதை திருத்த நினைக்கின்றோம். அது முடியாமல் போனால் அந்த தவறு எங்கிருந்து ஆரம்பமாகியதோ அந்த அடித்தளத்தில் மாற்றத்தை ஏற்படுத்த நினைக்கின்றோம்.

இதெல்லாம் இவ்வாறு இருக்க எதிர்வரும் 16ஆம் திகதி நாம் ஏற்படுத்தப் போகும் மாற்றம் என்ன? இலங்கையர்களின் கனவுகளை, எதிர்காலத்தை, பொருளாதாரத்தை எதிர்வரும் ஐந்து ஆண்டுகள் நாம் யாரிடம் ஒப்படைக்கப் போகின்றோம்?

தேர்தலில் நமது வாக்கினை யாருக்கு வழங்குவது என்பது அவரவர்களின் சொந்த தனிப்பட்ட உரிமையாகும். ஆனால் வாக்களிக்கப் போகின்றோமா இல்லையா என்பதையே சிலர் இதுவரையில் முடிவெடிக்கவில்லை என தெரிவிக்கின்றன தகவல்கள்.

இலங்கையின் எட்டாவது ஜனாதிபதியை தீர்மானிக்கும் பொறுப்பு இலங்கையர்களாகிய எம் கைகளிலேயே உள்ளது. இதில் எமது பங்களிப்பு எவ்வாறு இருக்கப் போகிறது?