சர்வதேச கண்காணிப்பாளர்கள் வாக்கெண்ணும் நிலையத்தில் நடவடிக்கை

Report Print Rusath in தேர்தல்

மட்டக்களப்பு மாவட்டத்தின் தேர்தல் பிரதான வாக்கெண்ணும் நிலையத்திற்கு சர்வதேச கண்காணிப்பாளர்கள் இன்று விஜயம் செய்து, தமது கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.

சர்வதேச கண்காணிப்பாளர்கள் மட்டக்களப்பு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் மா.உதயகுமாரை சந்தித்து தேர்தல் முன்னாயத்த நடவடிக்கை தொடர்பில் கேட்டறிந்து கொண்டனர்.

மேலும், வாக்குசாவடிகளுக்கு நேரடியாக சென்று பார்வையிட்டிருந்தனர்.

மக்கள் சுமூகமான முறையில் வாக்களிப்பதற்கு ஏற்ற வகையில் பாதுகாப்பு மற்றும் ஏனைய நடவடிக்கைகளும், அத்துடன் முதியோர்கள், விசேட தேவையுடையோர்கள் ஆகியோர் வாக்களிப்பதற்கு ஏதுவான சூழலை ஏற்படுத்தியிருப்பதாகவும் தெரிவத்தாட்சி அலுவலர் தெரிவித்தார்.

இதேவேளை, உள்நாட்டு, வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் தொடர்ந்தும் தங்களது கண்காணிப்பு பணியினை மேற்கொண்டிருந்தனர்.

பொதுநலவாய நாடுகளிலிருந்து வருகைதந்த குறித்த சர்வதேச கண்காணிப்பு குழுவினர் தேர்தல் கடமையில் பங்கேற்று தகவல் திணைக்களத்தில் ஊடக பிரிவினர்களோடு கலந்துரையாடியதும் குறிப்பிடத்தக்கது.