வவுனியாவில் கடும் பாதுகாப்புக்குள் வாக்கு சாவடிகள்

Report Print Thileepan Thileepan in தேர்தல்

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகள் வாக்குச் சாவடிகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் அனைத்து வாக்குச் சாவடிகளுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் ஒரு இலட்சத்து 17 ஆயிரத்து 333 பேர் வாக்களிக்கவுள்ள நிலையில் 142 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இவ் வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப் பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் குறித்த வாக்களிப்பு நிலையங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், மாவட்ட செயலகத்திலும் பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட செயலகம் முன்பாக செல்லும் வீதிகளுக்கு பொலிஸ் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், இரகசிய கமராவுடன் பொலிசார் கண்காணிப்பு நடவடிக்கைளிலும் ஈடுபட்டுள்ளனர்.