நீதியான தேர்தல்களை நடத்தும் பொறுப்பு அரச அதிகாரிகளிடம் உள்ளது!

Report Print Ajith Ajith in தேர்தல்

சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல்களை நடத்தும் பொறுப்பு அரச அதிகாரிகளிடம் உள்ளது என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் இலங்கையின் ஜனாதிபதி தேர்தலை கண்காணிக்க வந்துள்ள குழுவின் தலைவர் மரீஸா மார்டிஸ் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் தேர்தல் எவ்வாறு வெளிப்படை தன்மையுடன் நடைபெறுகிறது என்பதை தாம் அவதானித்துக்கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே இலங்கையின் தேர்தல்களில் கண்காணிப்பு பணிகளுக்காக ஐரோப்பிய ஒன்றியம் ஐந்து அணிகளை களத்துக்கு அனுப்பியிருந்தது.

இதன் பின்னர் அது வெளியிட்ட பரிந்துரைகளில் மூன்று பரிந்துரைகளை இலங்கை அதிகாரிகள் செயற்படுத்தியுள்ளனர். இந்தநிலையில் எதிர்வரும் டிசம்பர் 12ம் திகதி வரை தமது அணி இலங்கையில் தங்கியிருக்கும்.

இதனடிப்படையில் தமது அணி தேர்தல் தொடர்பில் நாளாந்த அறிக்கை, குறுகிய கால அறிக்கை, நீண்டகால அறிக்கை என்ற வகையில் தகவல்களை வெளியிடும் என்று ஜனாதிபதி தேர்தலை கண்காணிக்க வந்துள்ள ஐரோப்பிய ஒன்றியக்குழுவின் தலைவர் மரீஸா மார்டிஸ் தெரிவித்துள்ளார்.