தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

Report Print Murali Murali in தேர்தல்

வாக்களிப்பிற்காக இலங்கை வந்துள்ள வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் வாக்குசாவடியில் தங்களின் கடவுச்சீட்டினை காண்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது. 07வது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியைத் தெரிவுசெய்கின்ற 08வது ஜனாதிபதி தேர்தல் நாளை நடைபெறவுள்ளது.

தேர்தலில் வாக்களிப்பதற்காக வெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள் பலர் நாடு திரும்பியுள்ளனர். இந்நிலையிலேயே, தேர்தல்கள் ஆணைக்குழு இந்த கோரிக்கையினை விடுத்துள்ளது.