யாழில் தமது வாக்கை பதிவிட்ட மாவை எம்.பி

Report Print Sumi in தேர்தல்

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தமது வாக்கினை பதிவிட்டுள்ளார்.

யாழ்.கொல்லங்கலட்டி தமிழ் மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்திற்கு காலையிலேயே தமது வாக்கினை பதிவிட்டுள்ளார்.

இதன்போது அவர், தமிழ் மக்கள் உள்ளடங்கலாக அனைவரையும் வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

நாடெங்கிலும் உள்ள வாக்களிக்கும் நிலையங்களில் தற்போது வாக்கு பதிவுகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்த இன்று காலை யாழ்.நாவலர் கலாசார மண்டபத்தில் தமது வாக்கினை பதிவிட்டுள்ளார்.