வாக்களிப்புக்கு முன்னர் மத வழிபாடுகளில் ஈடுபட்ட சஜித்

Report Print Vethu Vethu in தேர்தல்

இலங்கையில் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவு செய்யும் வாக்கெடுப்பு நாடு பூராகவும் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையங்கள் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

வாக்களிப்பதற்கு முன்னர் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ மத வழிபாடுகளில் ஈடுபட்டார்.

சஜித் பிரேமதாஸ சற்று முமன்னர் கதிர்காமம் கிரிவெஹெர மற்றும் கதிர்காம கோயிலில் ஆசீர்வாதம் பெற்றார்.

புதிய இணைப்பு

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளார் சஜித் பிரேமதாச சற்று முன்னர் தனது வாக்கினை அளித்துள்ளார்.

திஸ்ஸமஹாராம வீரவில சுரனிமல ஆரம்ப பாடசாலையில் இன்று காலை 7.15 மணியளவில் தனது வாக்கினை அளித்துள்ளார்.

ஆசியாவின் பழமையான ஜனநாயக நாட்டின் மில்லியன் கணக்கான பொதுமக்கள் இணைந்து இன்று தமது அரச தலைவரை தெரிவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் அவர் இதனை கூறியுள்ளார். இந்த ஜனநாயக செயற்பாட்டில் தானும் ஈடுபட்டுள்ளதாகவும் மக்களின் வாக்கு மக்களின் உரிமை எனவும் அது அவர்களின் பலம் என்பதுடன் அது மக்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாக்குச் சாவடிகளுக்கு மக்கள் தமது வாக்குரிமையை பயன்படுத்துமாறும் சஜித் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.