ஜனாதிபதி தேர்தலின் இறுதி முடிவு தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் தகவல்

Report Print Vethu Vethu in தேர்தல்

ஏழாவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கெடுப்பு நாடாளவிய ரீதியில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தேர்தலில் வெற்றி பெறுபவர் ஜனாதிபதியாக எதிர்வரும் 18ஆம் திகதி பதவி பிரமாணம் செய்வார் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் தெரிவாகும் ஜனாதிபதி ஆண், பெண் அல்லது தேரராக இருந்தாலும் அவர் எதிர்வரும் 18ஆம் திகதி பதவி பிரமாணம் செய்யவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

இன்று மாலை 5 மணியுடன் வாக்களிப்பு நடவடிக்கை முடிவுக்கு வருகின்றது. அதற்கமைய முதலாவது தேர்தல் முடிவு இன்று நள்ளிரவு 12 மணிக்கு வழங்க முயற்சிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.