வவுனியாவில் மாலை 7 மணியிலிருந்து வாக்கு எண்ணிக்கை ஆரம்பம்

Report Print Theesan in தேர்தல்

ஜனாதிபதி தேர்தலில் வவுனியாவில் இன்றுமதியம் 12 மணி வரை 50 வீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாவட்ட தெரிவித்தாட்சி அலுவலரும் அரச அதிபருமான எம்.கனீபா தெரிவித்தார்.

வாக்களிப்பு தொடர்பாக அவரது அலுவலகத்தில் இன்று மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

மாலை 5 மணியிலிருந்து தபால் வாக்குகளும், ஏனைய வாக்குகள் மாலை 7 மணியிலிருந்தும் எண்ணப்படும்.

இதேவேளை வவுனியா மாவட்ட செயலக வளாகத்தில் 20 வாக்குகள் எண்ணும் நிலையங்கள் அமைக்கபட்டுள்ளது.

தேர்தல் கடமைகளிற்காக வவுனியா மாவட்டத்தில்1728 அரச ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என மேலும் தெரிவித்தார்.