மன்னார் மாவட்டத்தில் பிரதேச ரீதியான வாக்களிப்பு விகிதாசாரம் வெளியீடு

Report Print Ashik in தேர்தல்

நாடளாவிய ரீதியில் இடம்பெற்றுவரும் ஜனாதிபதி தேர்தலில் விகிதாசார விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் மன்னார் மாவட்டதில் உள்ள ஐந்து பிரதேச செயலகங்களில் காலை தொடக்கம் மதியம் வரையான வாக்களிப்பு விகிதமானது வெளியிடப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் அதிகளவான மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவில் 64.36 வீதமான வாக்கு பதிவுகளும் குறைவாக நானாட்டான் பிரதேச செயலக பகுதிகளில் 54.57 வீதமான வாக்கு பதிவும் இடம் பெற்றுள்ளது.

அத்துடன் மடு பிரதேச செயலக பகுதியில் 67.09 விகிதமும், முசலி பிரதேச பகுதிகளில் 67.03 வீதமும், மன்னார் நகர பிரதேச செயலக பகுதிகளில் 56.7 வீதமும் பதிவாகியுள்ளது.

ஒட்டுமொத்தமாக மன்னார் மாவட்டம் முழுவதும் 56.72 வீத வாக்களிப்பு இடம்பெற்றுள்ளதுடன் 50,706 பேர் இதுவரை வாக்களித்துள்ளனர்.