வீதிகள் மூடப்படவில்லை! பொலிஸ் திணைக்களம் அறிவிப்பு

Report Print Steephen Steephen in தேர்தல்

ஜனாதிபதித் தேர்தல் வாக்கெடுப்பு நாடு முழுவதும் மிகவும் அமைதியான முறையில் நடைபெற்று வருவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் சில வீதிகள் மூடப்பட்டிருப்பதாக செய்யப்படும் பிரச்சாரம் முற்றிலும் பொய்யானது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், வாக்கெடுப்பை சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடத்துவதற்கு தேவையான போதியளவு பாதுகாப்பை பொலிஸார் வழங்கியுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.