மட்டக்களப்பில் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் 22 பதிவு

Report Print Rusath in தேர்தல்

இலங்கையின் சோசலிச குடியரசின் இன்றைய தேர்தலானது மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பாடு செய்தமைக்கமைவாக சுமூகமான முறையில் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக தெரிவத்தாட்சி அலுவலர் மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 428 வாக்களிப்பு நிலையங்களிலும் வாக்காளர்கள் வாக்களித்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் இன்றைய தினம் 22 தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான விசாரணைகள் பொலிஸாருடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.

தற்போது கல்குடா தேர்தல் தொகுதியில் 22.45 வீதம் வாக்களிக்கப்பட்டுள்ளதாகவும், அதே போன்று மட்டக்களப்பு தேர்;தல் தொகுதியில் 22.01 வீதம் வாக்களிக்கப்பட்டுள்ளதாகவும், அதே போன்று பட்டிருப்பு தேர்தல் தொகுதியில் 23.48 வீதம் வாக்களிக்கப்பட்டுள்ளதாகவும், ஒட்டு மொத்தமாகவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 22.49 வீதமான வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளது.

இப் பதிவுகள் யாவும் 11.00 மணிக்கு முன்னர் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இன்றைய தினம் 22 தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான விசாரணைகள் பொலிஸாருடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.