தெரணியகல பகுதியில் தாக்குதல்: இருவர் காயம்!

Report Print Jeslin Jeslin in தேர்தல்

கேகாலை – தெரணியகல தேர்தல் தொகுதியில் ரத்னாகல பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் தெரணியகல மற்றும் அவிசாவளை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரணியகல பொலிஸார் தெரிவித்தனர்.

வாக்களிக்கச் சென்ற சிலருடன் வாய்த்தகராறில் ஈடுபட்ட குழு இவ்வாறு தாக்குதலை நடத்தியிருப்பதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

தாக்குதலை நடத்திய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தெரணியகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்திவருகின்றனர்.