கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வாக்களித்தார்

Report Print Rusath in தேர்தல்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித்த தலைவரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் ஏறாவூர் அறபா வித்தியாலயத்தில் இன்று காலை தனது வாக்கை அளித்தார்.

மட்டக்களப்பில் வாக்களிப்பு சுமுகமாக இடம்பெற்று வருகின்ற நிலையில், தேர்தல் கண்காணிப்பாளர்களும் அவதானிப்புக்களில் ஈடுபட்டு வருகின்றனர். மட்டக்களப்பு மனித உரிமைகள் பணிக்குழுவும் நிலைமைகளை நோட்டமிட்டு வருகின்றது.

இதேவேளை இன்றைய தேர்தல் கடமைகளில் மொத்தம் 3,800 அரச அலுவலர்கள் தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த 3800 பேரில் 2000 பேர் மட்டக்களப்பு மாவட்டமெங்கும் அமைக்கப்பட்டுள்ள 428 வாக்குச் சாவடிகளில் தற்போது இடம்பெறும் வாக்களிப்புக் கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்.

மிகுதி 1800 பேர் இன்றிரவு இடம்பெறவுள்ள வாக்கு எண்ணும் கடமைகளிலும் ஈடுபடவுள்ளனர்.

இதேவேளை மட்டக்களப்பு – மாந்தீவு எனும் ஒரு குட்டித் தீவில் அங்கு வாழும் மூன்று பேருக்காக ஒரு வாக்களிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

இது இலங்கையில் மிகவும்குறைந்த எண்ணிக்கையினருக்காக அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையமாகும்.

அந்தவகையில், அமைச்சர் மனோ கணேசன் தனது குடும்பம் சகிதம் தெஹிவளை ஸ்ரீ மஹா விஹார வாக்குச்சாவடிக்கு சென்று தமது வாக்கினை பதிவிட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா தேர்தல் தொகுதியில் ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியும், வாழைச்சேனை வினாயகபுரம் வாணி வித்தியாலயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.யோகேஸ்வரன் தங்களது வாக்குகளை அளித்திருந்தனர்.

மேலதிக தகவல் - நவோஜ்