நாட்டு மக்களுக்கு பிரதமர் ரணில் வழங்கியுள்ள உறுதிமொழி

Report Print Jeslin Jeslin in தேர்தல்

புதிய ஜனநாயக முன்னணியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாசவின் வெற்றியின் பின்னர், நல்லாட்சி அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் அனைத்தும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.

இன்றையதினம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

நல்லாட்சி அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்களின் மூலமாகவே சுதந்திரமானதும், அமைதியானதுமான ஜனாதிபதித் தேர்தலை நடாத்த முடிந்திருக்கிறது, சஜித் பிரேமதாசவின் வெற்றியின் பின்னர் கடந்தகால செயற்திட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்.

2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் ஊடாக நல்லாட்சி அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்டதைத் தொடர்ந்து அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தின் ஊடாக சுயாதீன ஆணைக்குழுக்கள் உருவாக்கப்பட்டு, அவை எவ்வித தலையீடுகளுமின்றி சுதந்திரமாக செயற்பட்டன.

அதன் ஓரங்கமாகவே இம்முறை ஜனாதிபதித் தேர்தல் எவ்வித தலையீடுகளுமின்றி சுதந்திரமானதாகவும், நியாயமான முறையிலும் அமைதியாக நடைபெற்று முடிவடைந்திருக்கின்றது.

இந்நிலையில், ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாசவின் வெற்றியின் பின்னர், நல்லாட்சி அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் அனைத்தும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என்று நம்புகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.