வெளிநாட்டிலிருந்து வந்தும் வாக்களிக்க முடியாமல் போன இலங்கையர்கள்!

Report Print Tamilini in தேர்தல்

இந்தியாவின் டெல்லி விமான நிலையத்தில் இருந்து கொழும்பில் வரவிருந்த விமானம் 3 மணித்தியாலம் தாமதமடைந்த காரணத்தினால் இலங்கை பயணிகள் கடும் சிரமத்திற்கு முகங்கொடுத்துள்ளனர்.

AI-283 ரக விமானம் இன்று காலை 1.40 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையவிருந்தது.

எனினும் குறித்த விமானம் இன்று காலை 5 மணிக்கே கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

அதில் வந்த பயணிகளால் பதுளை போன்ற பிரதேசங்களுக்கு சென்று வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த விமானம் தாமதமடைந்தமையினால் டெல்லி விமான நிலையத்தின் விமான நிறுவன அதிகாரிகளுடன் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அத்துடன் 100 வாக்களர்களுக்கு வாக்களிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.