வவுனியாவில் தற்போதைய தேர்தல் கள நிலவரங்கள்..

Report Print Jeslin Jeslin in தேர்தல்

வவுனியா, மாவட்டத்தில் இதுவரையில் நூற்றுக்கு 72 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக அம்மாவட்ட பிரதி தேர்தல்கள் ஆணையாளர் ஐ.எம்.ஹனீபா எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

தாம் வாக்களிக்கும் நிலையங்களுக்கு மேற்பார்வைக்காக சென்றிருந்ததாகவும் சில வாக்களிப்பு நிலையங்களில், வாக்கு பதிவுகள் அனைத்தும் பூர்த்தியடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எவ்வித, தேர்தல் அசம்பாவிதங்களோ, வன்முறைகளோ வவுனியா மாவட்டத்தில் பதிவாகவில்லை எனவும் குறிப்பிட்ட அவர் வாக்கெடுப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்தவுடன் வாக்குப் பெட்டிகளை வாக்கெண்ணும் நிலையங்களுக்கு எடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.