அம்பாறையில் ஆர்வத்துடன் வாக்களிக்கும் மக்கள் - சந்தேகத்திற்கிடமான பிக்கு - மக்களை மிரட்டும் அரசியல்வாதிகள்

Report Print Varunan in தேர்தல்

இலங்கையின் ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி தற்போது இடம்பெற்று வருகின்றது.

குறிப்பாக அம்பாறை மாவட்ட பொறுத்தவரை இளைஞர்கள் யுவதிகள் வயோதிபர்கள் உட்பட அனைவரும் வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று தங்களுடைய வாக்குகளை பயன்படுத்துவதை காணக்கூடியதாக இருக்கின்றது.

அதேவேளை பாதுகாப்பு பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதுடன் உள்நாட்டு வெளிநாட்டு சர்வதேச கண்காணிப்பாளர்களும் தங்களது கண்கானிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அம்பாறை மாவட்டத்தை பொருத்தமட்டில் 503790 பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர். அந்தவகையில் இதில் கல்முனை தேர்தல் தொகுதியில் 76283 பேரும்சம்மாந்துறை தேர்தல் தொகுதியில் 89057 பேரும் பொத்துவில் தேர்தல் தொகுதியில் 143229 பேரும் அம்பாறை தேர்தல் தொகுதியில் 174385 பேரும் வாக்களிக்கதகுதி பெற்றுள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தில் 523 வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். மேலும் 53 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்களிப்பு நிலையங்களில் 6470 பேர் கடமையில் ஈடுப்பட்டுள்ளதோடு பாதுகாப்புக்காக பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பொலிஸாரும் கடமையில் ஈடுப்பட்டுள்ளனர். மாலை 5 மணி வரை வாக்களிப்பு இடம்பெறவிருக்கின்றது.

அதன்பின்னர் வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பாக வாக்கு எண்ணும் நிலையங்களுக்குகொண்டு செல்லப்படும். கல்முனையில் சில பிரதேசங்களில் மக்களை மிரட்டும் அரசியல்வாதிகள் நாடு பூராவும் நடைபெற்றதுவரும் ஜனாதிபதி தேர்தலில் ஆர்வத்துடன் வாக்களிக்கவரும் மக்களை பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் கட்சி சார்பாக வாக்களிக்க வலியுறுத்தி வருகின்றதை காணமுடிந்தது .

குறிப்பாக கல்முனை தேர்தல் தொகுதியில் இந்நடவடிக்கைகள் பரவலாக முன்னெடுக்கப்படுகிறது. இச்செயற்பாட்டை கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரன் ராஜன் கல்முனை இராமகிருஷ்ண மகா வித்தியாலயம் அமைந்துள்ள வாக்கு சாவடி மற்றும் கல்முனை மாமாங்கம் வித்தியாலயத்தில் அமைந்துள்ள வாக்கு சாவடிக்குஅருகாமையிலும் அன்னம் சின்னத்தில் போட்டியிடும் சஜித் பிரேமதாஸவிற்கு வாக்களிக்குமாறு மக்களை வலியுறுத்தினர்.

இதன் போது திடிரென வாக்கு சாவடிக்கு வாக்களிக்க வந்த சுபத்ரா ராமயவிகாராதிபதி சங்கரத்ன தேரர் வாக்கு சாவடியில் பாதுகாப்பு கடமையில் நின்ற பொலிசாரிடம் நீதியான தேர்தலை நடார்த்த மக்களை குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு வாக்களிக்க நிர்ப்பந்திப்பவர்களை வாக்கு சாவடிக்கு அருகாமையில் அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி சென்றார்.

இதனை தொடர்ந்து கல்முனை மாநகர சபை உறுப்பினர் செலஸ்ரினா கார்மேல் பற்றியா கல்லூரிக்கு அருகாமையில் நின்று மக்களை மிரட்டும் தொடர்ந்தும் ஈடுபட்டிருந்தார். இதே வேளை சாய்ந்தமருது அல் ஹமரூன் வித்தியாலயத்திற்கு அருகே உள்ள பள்ளிவாசல் ஒன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்ற பிக்கு ஒருவரிடம் கல்முனை பொலிஸார் விசேட அதிரடிப்படையினர் விசாரணை மேற்கொண்ட நிலையில் பதற்றம் நிலவியது. மேலும் பிக்குவை பலவந்தமாக வெளியேற்றியதை காணமுடிந்தது.